6,000 ரூபாவால் விலை குறைந்த தங்கம்!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(26) கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5,840 ஆக விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 46,720 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6310 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,480 ஆக விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை படிபடியாக குறைவடைந்து வருகிறது.
ஜனவரி 1 ஆம் திகதி 173,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம் இன்று (26) 167,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களான இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம் பின்வருமாறு,
2024-01-01 173,300
2024-01-12 170,250
2024-01-16 171,350
2024-01-24 168,050
2024-01-26 167,450