நீச்சல் உடையில் ஆண் – சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்!
அவுஸ்திரேலியாவில் பெண்கள் அணியும் நீச்சல் உடையை அணிந்து ஆண் ஒருவர் விளம்பரம் மாடலாக நடித்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் உடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வழக்கமான பெண்களை வைத்து மாடலாக பயன்படுத்தி விளம்பர வீடியோவை வெளியிடும்.
எனினும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும் நீச்சல் உடையை ஒரு ஆண் விளம்பர மாடலுக்கு அணிவித்து விளம்பரப்படுத்தியது.
இந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த விளம்பரத்திற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விளம்பரம் குறித்து அவர்கள் கூறுகையில் , பெண் அணியும் நீச்சல் உடைக்கு ஆண் மாடலை பயன்படுத்தியது மிகவும் தவறு என்றும் இது அருவருப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளதுடன் இது பெண்களை சிறுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்
அதேசமயம் இந்த விளம்பரம் தவறானது அல்ல என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண் மாடல் அணிந்த நீச்சல் உடை விளம்பரம் இன்னும் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.