மீண்டும் மறுவடிவில் வௌியாகும் 96!
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.
பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே..காதலே’, ‘லைப் ஆஃப் ராம்’, ‘ஜர்னி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்.14 ஆம் தேதி 96 படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.