தங்கம் விலையில் திடீர் மாற்றம்!
![](https://oosai.lk/wp-content/uploads/2024/01/GOLD-540x365.jpg)
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 634,392 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம் 22,380 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 179,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 20,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 164,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.