பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் புதிய தொடர்!
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. என்றாலும் தற்போது எல்லாம் தொடர்களை இளம் வயதினரும் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் புதிய தொடரொன்று விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த புதிய தொடரில் பிரபல திரை நட்சத்திரங்கள் உள்பட பலரும் நடிக்கின்றனர். இந்த புதிய தொடருக்கு மல்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன் பாப் உள்ளிட்ட பிரபலங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், பாண்டவர் இல்லத்தில் நடித்த கிருத்திகா, அருந்ததி தொடர் பிரபலம் நிகிதா, ரோஜா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷயா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கங்கா மற்றும் பிரியாத வரம் வேண்டும் தொடர்களில் நடித்த விமல் வெங்கடேசன் மல்லி தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்தொடரில் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிப்பதால் ரசிகர்களுக்கு இத்தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
மல்லித் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம், ப்ரோமோ விடியோ உள்ளிட்டவை குறித்த தகவல்கள் பின்வரும் நாள்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.