இணையத்தில் வைரலாகும் விடியோ!
சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஸ்டார் படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோவின் பாடல் இளன் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது.