புதிய App ஒன்றை அறிமுகம் செய்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
வாருங்கள், தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சரித்திரம் படைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.