குறைந்த விலையில் மதுபானங்கள் அறிமுகம்!
வரும் கோடைக் காலத்தை மதுப்பிரியர்கள் கொண்டாடும் வகையில், விலை மலிவான 12 புதிய சரக்குகளை டாஸ்மாக் அறிமுகப்படுத்துகிறது.
அறிமுகப்படுத்தும் புதிய சரக்குகளுக்கு சிறப்பான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு புதிய சரக்குக்கு வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் செயல்படும் மதுபான ஆலையில் இருந்து தயாரித்து விற்பனைக்கு வந்திருக்கும் சாதாரண வகை மதுபானமாக இந்த வீரன் இடம்பெற்றுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர வகை மதுப்பிரியர்களுக்கு உகந்ததாக உள்ளதாம்.
விரைவில், இதுபோன்ற புதிய மதுபான வகைகள் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.