இலங்கையில் நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் பிரசித்தப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைப்பதற்கும், வரவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு நாட்டை தயார்படுத்துவதற்கும் அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.