சம்பளம் அதிகரிக்கப்படவில்லை – மத்திய வங்கி ஆளுநர் அதிரடி அறிவிப்பு!
தமது சம்பளத் தொகை அதிகரிக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பானது பிரதி ஆணையாளர்கள் வரையில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பின் மூலம், தன்னை விடவும் குறைந்த தரத்திலான சில வங்கி அதிகாரிகள் தம்மை விடவும் கூடுதல் சம்பளம் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கியாளர் என்ற வகையில் தமக்கு உள்ள அனுபவத்தையும் அறிவாற்றலையும் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே தமது சம்பளம் தொடர்பில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.