OOSAI RADIO

Post

Share this post

அரச குடும்பத்தில் வெடித்த சண்டை!

மன்னருக்கு புற்றுநோய், இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் என ராஜ குடும்பம் கலகலத்துப்போயிருக்கும் நிலையில், இளவரசர் வில்லியம் தன் தம்பி ஹரியை பிரித்தானியாவுக்கு அழைத்ததாகவும், அதனால் ஹரிக்கும் மேகனுக்கும் இடையில் சண்டை வெடித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேகனால் உருவான பிரச்சினைகளைத் தொடர்ந்து, தன் மனைவி பிள்ளைகள் நலனுக்காக ராஜ குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேற முடிவு செய்தாலும், இளவரசர் ஹரி, தன் தந்தையான மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு என தெரிந்ததும், உடனடியாக, பல மைல்கள் கடந்து தந்தையைக் காண ஓடோடி வந்ததை அனைவரும் அறிவர்.

குடும்பம் சிக்கலான ஒரு சூழலுக்குள் கடந்து செல்லும் நேரத்தில், தான் தன் குடும்பத்துடன், அதாவது, தந்தை, அண்ணன், அண்ணியுடன் இருக்கவேண்டும் என ஹரி எண்ணுவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டதாகவும், ஹரி, தன்னால் குடும்பத்துக்கு ஏற்பட்ட அவப்பெயருக்காக அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும், பிரித்தானியாவுக்கு வருமாறு வில்லியம் ஹரியை அழைத்ததாகவும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேகனிடம் பிரித்தானியா திரும்புவது குறித்த தன் திட்டத்தை ஹரி தெரிவிக்க, மேகன் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், இருவருக்கும் இடையில் சண்டை வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

தான் கலிபோர்னியாவைவிட்டு வரமாட்டேன் என மேகன் கூறியதாகவும், உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லை என ஹரி குற்றம் சாட்டியதாகவும், அதைத்தொடர்ந்து, இதுவரை இல்லாத அளவில் இருவருக்குமிடையே பெரிய சண்டை உருவானதாகவும் பிரித்தானிய அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிய விரும்பாத ஹரி, தான் மட்டும் பிரித்தானியாவுக்குச் சென்றுவிடுவதாக மேகனை மிரட்டியதாகவும், பிரித்தானியாவில் தன் குடும்பம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தன்னால் உதவமுடியவில்லையே என தவிப்பதாகவும், அதனால் அவர் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter