OOSAI RADIO

Post

Share this post

தேர்தலில் மாங்காய் சின்னத்தில் இயக்குனர் தங்கர்பச்சன்!

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, அமமுக, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் போன்றோர் கூட்டணி அமைத்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக பாமக – பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அது தேர்தல் அரசியலில் எம்மாதிரியான மாற்றத்தை கொண்டுவரும் என்பதை தேர்தல் முடிவில் தான் பார்க்கவேண்டும்.
வேட்பாளர் பட்டியல்

தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், வேட்பாளர்களை கட்சிகள் மாறி மாறி அறிவித்து வருகிறார்கள். நேற்று பாஜகவின் வேட்பாளர், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போன்றோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கடலூர் – தங்கர் பச்சன்

தருமபுரி – அரசாங்கம்

விழுப்புரம் – முரளி சங்கர்

திண்டுக்கல் – திலகபாமா

அரக்கோணம் – கே.பாலு

ஆரணி – கணேசகுமார்

மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி – தேவதாஸ்

சேலம் – அண்ணாதுரை

ஒரே ஒரு தொகுதி வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

Leave a comment

Type and hit enter