CSK அகடமி விருதுகள்!
சென்னை சூப்பா் கிங்ஸ் அகடமி சாா்பில் சிறப்பாக செயல்பட்ட தமிழக இளம் வீரா், வீராங்கனைக்கு சிறப்பு விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மறைந்த தமிழக கிரிக்கெட் வீரா்கள் வி.பி. சந்திரசேகா், டிஜே. கோகுலகிருஷ்ணனை கௌரவிக்கும் வகையில் அவா்களது பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறுவா் பிரிவில் வி.பி. சந்திரசேகா் விருது அக்ஷய் சாரங்கதருக்கும், சிறுமியா் பிரிவில் டி.ஜே. கோகுலகிருஷ்ணன் விருது ஜே. கமலினிக்கும் வழங்கப்பட்டன.
சிஎஸ்கே சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன், நியூஸிலாந்து வீரா் ரச்சின் ரவீந்திரா ஆகியோா் விருதுகளை வழங்கிப் பாராட்டினா்.