கனடாவில் மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு
கனடாவின், சஸ்கற்றுவானில் வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் வயது வந்த 4 பேரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, கனேடிய பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.