OOSAI RADIO

Post

Share this post

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்திய கணவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனது மனைவியின் 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் தங்கையான பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலையிலிருந்து திரும்பியதும், சந்தேக நபர் அவரை வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி இது குறித்து அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன், 15 வயது சிறுமியும், சந்தேக நபரும் வீட்டில் இருந்து காணாமல் போனதையடுத்து, மனைவி புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

அதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும் கணவன்-மனைவியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை பரிசோதித்த முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter