OOSAI RADIO

Post

Share this post

வித்யா படுகொலை மரண தண்டனை கைதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புங்குடுதீவு கைட்ஸ் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (31) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் குறித்த நபரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter