கோலி சோடா நடிகையா இது..?
சினிமாவில் சில நடிகர்களோ, நடிகைகளோ அறிமுகமாகும் போது பார்ப்பதற்கு சுமாராக தான் தெரிவார்கள். ஆனால் ஒரு காலகட்டத்துக்கு பிறகு அவர்களது தோற்றமே வேற லெவலில் மாறிப் போய் விடும்.
உதாரணமாக, சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில், மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். அப்போது அவரை புதுமுக நடிகையாக பார்த்துவிட்டு யாரும் பெரியதாக கவனிக்கவில்லை.
ஆனால் அவரே அடுத்த சில ஆண்டுகளில் அருந்ததீ படத்தில் நடித்த போது, அனுஷ்காவை பார்த்து பெருமூச்சு விடாத ஆண்களே இருக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு செம்மையான அழகில், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் அனுஷ்கா.
அதே போல் தர்மத்தின் தலைவன், வருஷம் 16 படங்களில் நடித்த போது ரொம்ப சுமாரான அழகியாக தெரிந்த குஷ்பு, சின்னத்தம்பி படத்தில் நடித்த பிறகு, ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு பேரழகியாக மாறிப் போனார்.
அதே போல் என் ராசாவின் மனசிலே இருந்த மீனாவின் அழகு, எஜமான் படத்தில் சற்று கூடியிருந்தது. முத்து படத்தில் பார்ப்பவர்கள் எல்லாம் ஆசைப்படும் ஒரு பேரழகியாக ரசிகர்களுக்கு காட்சியளித்தார்.
பெண்களுக்கு குறிப்பிட்ட வயதில்தான் ஒருவிதமான அழகு வருகிறது. அதற்கு முன்பு அப்படி ஒரு அழகை அவர்களிடம் காண முடியாது. அதே போல் குறிப்பிட்ட காலம் வரை தான் அந்த அழகு நிலைத்திருக்கும். சில ஆண்டுகளில் அந்த அழகு காணாமல் போய்விடும்.
அதனால்தான் சில நடிகைகள் துவக்கத்தில் சுமாராக இருந்து, பிறகு பேரழகிகளாக ரசிகர்களுக்கு தோற்றமளிக்கின்றனர்.
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டில் வெளியான படம் கோலி சோடா. இந்த படம் 4 சிறுவர்கள், 2 சிறுமிகளை மையப்படுத்திய ஒரு கதையாக இருந்தது.
இந்த படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் நடித்திருந்த சிறுவர்களே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கோலி சோடா படத்தில் ATM கேரக்டரில் நடித்திருந்த நடிகை சீதா பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். புட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, ஒல்லியான அந்த பெண்ணின் பேச்சும், நடிப்பும் சட்டென ரசிகர்களின் மனதை கொளளை கொண்டது.
கோலி சோடா படத்தை தொடர்ந்து சியான் விக்ரம், சமந்தா நடித்த 10 எண்றத்துக்குள்ள மற்றும் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சீதா.
பெரிய கதாநாயகியாக இல்லாவிட்டாலும், சின்ன சின்ன ரோல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையான சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே என வாயடைத்து போன ரசிகர்கள், அவருக்கு தன் அன்பான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.