OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி வேட்பாளாராக நாமல்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரையே பொதுஜன பெரமுன களமிறக்கும்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் ஆதரவை கோரவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், அது தொடர்பான தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் இளைஞராகவோ அல்லது நடுத்தர வயதுடையவராகவோ இருக்கலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter