OOSAI RADIO

Post

Share this post

O/L பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் 1,343 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இவ்வாறு மாற்றம் பதிவாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென மொத்தமாக 118,485 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த மீள் பரிசீலனை பெறுபேறுகள் கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு வெளிளியிடப்பட்டது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளமான www.doenets.lk அல்லது www.resulte.exams.gov.lk என்ற இணைய தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter