இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் – 13 பேர் பலி!
இலங்கையில் இவ் ஆண்டின் முதலாவது காலாண்டில் 207 பேர் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 13 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இது 165 பேர் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கடந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது 25 சதவீத அதிகரிப்பை காட்டுக்கிறது.
அதன்படி, இவ் ஆண்டின் முதலாவது காலாண்டில் பதிவான நோயாளர்களில் 23 ஆண்களும், ஐந்து பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
எஞ்சியவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். எச்.ஐ.வி ஆண் மற்றும் பெண் நோயாளர்களின் விகிதம் 7:1 ஆக உள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டு 43 எச்.ஐ.வி நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளதாவது,
2018 ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பரிசோதனை திறன் விரிவாக்கம், பாலியல் கல்வி மற்றும் ஆபத்தான பாலுறவு நடத்தை குறித்து மக்களிடையே கல்வி அறிவு இன்மை அறிவு மற்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது தொற்றாளர்கள் அதிகரிப்பிற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.