OOSAI RADIO

Post

Share this post

இந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதல் – 9 பேர் பலி!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில், குறைந்தது10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பக்தர்களுடன் ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது, பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த தாக்குதலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்து காயமடைந்தவர்களை மீட்பு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter