யாழ். வருகை தந்த பிரபல தென்னிந்திய பாடகி!
தென்னிந்திய பிரபல கர்நாடக பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். நித்தியஸ்ரீ மகாதேவன் சினிமா பின்னனி பாடகி மட்டுமல்லாது பல பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் – அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் “தெய்வீக இசை கச்சேரி” இடம்பெறவுள்ளது.
இன்று (10) மாலை 7 மணி அளவில் நீர்நொச்சிதாழ்வு ஆலய மூன்றில் குறித்த இசைநிகழ்சி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நித்தியஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் பலாலி விமான நிலையம் ஊடாக இன்று(10) மதியம் யாழ்ப்பாணம் வருகைதந்தனர்.
யாழ். வருகைதந்த நித்தியஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட குழுவினரை பலாலி விமானநிலையத்தில் வைத்து பிரதம கணக்காளர் அகிலன்,குடிவரவு குடியகல்வு அதிகாரி ராஜ்குமார், இசை நிகழ்வின் அனுசரணையாளர் திருமதி நேதாஜி தேன்மொழி, மற்றும் ஜெயந்தி திவாகர் ஆகியோர் வரவேற்றனர்.