OOSAI RADIO

Post

Share this post

இந்திய கிரிக்கட் அணிக்கு தமிழக வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் லக்சுமிபதி பாலாஜி நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனம், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் பொறுப்புக்களை ஏற்றப் பின்னர் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நியதியின்படி, தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுபவர் துணை பயிற்றுவிப்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொண்டிருக்கிறார்.

இதன் அடிப்படையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தமது தலைமையின் கீழ் விளையாடிய பாலாஜியை, கம்பீர் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளார்.

42 வயதான பாலாஜி, 30 சர்வதேச ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் தவிர எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

அத்துடன், அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது, பாலாஜி வர்ணனையாளராக செயற்பட்டார்.

இதேவேளை, டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ட்ராவிட் இந்திய தலைமைப் பயிற்சியாளர் நிலையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து, இலங்கையில் நடைபெறும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடருக்கு முன்னதாக கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், களத்தடுப்பு பயிற்சியாளராக டி. திலீப்பிற்கு பதிலாக தென்னாபிரிக்காவின் ஜொன்டி ரோட்ஸ் நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter