லக்ஷ்மி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியுடன் கூடிய நன்நாளில், புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது.
அதன்படி இன்றைய நாள் (08) எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷபம் ராசியினருக்கு செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அவர்களின் தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்ய விரும்பினால், மிகவும் நல்ல நாளாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள், மாணவர்கள் கல்வித் துறையில் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அனைவருடனும் உங்கள் உறவு நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் நீடித்து வந்த பதற்றம் தீரும்,
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. சொந்தமாக தொழில் செய்து வரும் இந்த ராசிக்காரர்கள் புதிய யோசனைகளுடன் தொழிலை முன்னெடுத்துச் சென்று, வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களின் வீட்டிற்கு முக்கிய நபர் வரக்கூடும். சகோதர சகோதரிகளின் உதவியால் பல பணிகள் முடிவடையும். அவர்கள் வழங்கும் அறிவுரைகளும் உங்கள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிரகளுக்கு தீட்டிய திட்டங்களில் வெற்றி பெறுவதோடு, தங்களுக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதிலும் வெற்றி பெறுவார்கள். பண வரவின் மூலம் நிதி நிலை பலப்படும். உங்கள் வேலையை மாற்ற திட்டமிடுபவர்களுக்கு, நாளை ஒரு நல்ல நாளாக இருக்கும், பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் எல்லாம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உடல் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டு வந்திருந்தால், உங்கள் கவலைகள் நீங்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு, கடந்த கால அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள். இலக்குகளை அடைய தீவிரமாக பணியாற்றுவார்கள். முதலீட்டிலும் நல்ல லாபம் கிடைக்கும். கல்வி, வேலை அல்லது பயணத்திற்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படும். யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், நாளை உங்கள் கடன் முழுவதும் அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மனதின் இருந்த சுமை விலகும்
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சூந்திருந்த கருமேகங்கள் விலகி, நிம்மதி பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நாளை வேலையில் அங்கீகாரத்தை பெறுவார்கள். மேலதிகாரிகளின் முன்னிலையில் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை தேடும் சிலருக்கு, நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். தந்தையின் ஆசீர்வாதத்துடன், விலையுயர்ந்த பொருள் அல்லது சொத்தை வாங்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நாளை நிறைவேறும்.