50 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்!
திருமணம் என்றாலே மணமகன், மணமகளை பற்றியும் அவர்களின் குடும்ப பின்னணிகளை ஆராய்ந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை அமைத்து கொடுத்த காலம் கடந்துவிட்டது. நாவீன காலத்தில் கம்ப்யூட்டரில் திருமணங்கள் நிச்சயக்கப்பட்டு அதில் சிலரின் வாழ்க்கை நிர்மூலமாவது தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் நட்சத்திர இடத்தை பெற்றிருக்கிறது இந்த சகலகலா சந்தியாவின் திருமணங்கள்.
சந்தியாவின் காதல் வலையில் சிக்கியவர்கள் படிக்காத மேதைகள் அல்ல, சகலமும் அறிந்த சமுதாய ஏமாளிகள் என்றால் ஆச்சரியமே. ஏமாந்தவர்கள் போலீஸ் முதல் பைனான்சியர்கள் வரை என்றால் சந்தியாவின் சாமர்த்தியத்திற்கு சாதனை விருதுகளை வழங்கினாலும் தப்பில்லை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த செலாம்பாளையத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த தனக்கு ஒரு மணமகளை தேடி பல இணையதளங்களில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவினை பார்த்து ஒரு அடிமை சிக்கிவிட்ட மகிழ்ச்சியில் கொடுமுடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண் வலை விரித்துள்ளார். இதில் சிக்கிய மகேஷிடம், செல்போனில் காதல் மொழி பேசி கரம் பிடித்துள்ளார் சந்தியா.
ஆசை ஆசையாய் வாழ்க்கை கப்பல் ஏறிய அரவிந்திற்கு ஒரு செய்தி பேரிடியாய் தலையில் விழுந்துள்ளது. நீ கட்டிய மனைவி சந்தியாவுக்கு சிலர் அல்ல பலருடன் திருமணம் நடந்துள்ளதாக அவளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களால் முடிந்த தகவலை காதில் போட்டுவிட்ட கதி கலங்கி போனார் மகேஷ் அரவிந்தன். சந்தியாவை பற்றி தகவல்களை திரட்டிய அரவிந்துக்குக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியையும் காத்திருந்தது.
சந்தியாவின் லீலைகளில் சிக்கி சீரழைந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்ல சாமார்த்தியமாக சந்தியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிக்க வைத்துள்ளார் அரவிந்தன்.
விசாரணையை தொடங்கிய தாராபுரம் மகளிர் போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு சந்தியாவின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவளால் ஏமாற்றமடைந்தவர்களின் பட்டியலை பார்த்து பதறியே போனார்கள். மதுரையில் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் முதல் சாப்ட்வேர் என்ஜினீயர் வரை பலரை மணமுடித்து ஏமாற்றி பணம் பறித்த கதை விசாரணையில் அம்பலமானது.
ஒருவர், இருவர் என சந்தியாவின் திருமணங்கள் 52யை தாண்டிய போது விழிபிதுங்கி நின்ற காவலர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தலை மறைவானர் சந்தியா. தப்பி ஓடிய சந்தியா மீண்டும் ஒரு ஏமாளியை தேட தனது புதிய பயணத்தை தொடங்கிவிட்டாரா? இல்லை காவல் துறையின் பிடியில் சிக்கி பல வாலிபர்களின் வாழ்க்கை காப்பாற்றபடுமா என்பதை காலம் தான் பதில் செல்ல வேண்டும்.