4 வயது சிறுமிக்கு மதுபானத்தை பருக்கிய தாய் மாமன்!
மஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்டத்தில் 4 வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருக வைத்த குற்றச்சாட்டில் தாய் மாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தாவது,
உலப்பனை பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு வெளிநாடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
வெளிநாட்டுக்கு தாய் சென்றபோது, தன்னுடைய 9 வயதான மகனையும், 4 வயதான மகளையும் ஓல்டன் தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டில் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
பிள்ளைகளை பார்ப்பதற்காக தாயின் வீட்டுக்கு அடிக்கடி வரும் தாய் மாமன் அந்த சிறுமிக்கு மதுவை பருகியுள்ளார். இதனை சிறுமியின் 9 வயதான சகோதரர் கண்டுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே அந்த நபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில், இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.