OOSAI RADIO

Post

Share this post

முடிவை மாற்றிய நடுவர்! (வீடியோ)

இந்தியா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்களை குவித்தது.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் 2 ஆவது டி20 போட்டியின் போது கள நடுவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜிம்பாப்வே அணி துடுப்பாடி கொண்டு இருக்கும் போது 8 ஆவது ஓவரை பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை இடது கை துடுப்பாட்ட வீரரான காம்ப்பெல் வலது பக்கம் திரும்பி அடிக்க முயற்சிப்பார். பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இதற்கு கள நடுவர் Wide என அறிவிப்பார். உடனே பிஷ்னோய் Wide ஆ… என மிரட்டலாக கேட்க சுதாரித்து கொண்ட நடுவர் மன்னிக்கவும் என கூறி அறிவிப்பை மாற்றி விடுவார். இது களத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Leave a comment

Type and hit enter