OOSAI RADIO

Post

Share this post

வீழ்ச்சியடைந்த புகலிடக் கோரிக்கை விண்ணபங்கள்!

சுவிஸ் நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ​​ ஐந்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், மற்றும் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 1,881 புகலிட கோரிக்கை விண்ணப்பங்கள் சுவிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்தை விட 476 அல்லது, 20.2% குறைவாகும்.

2023 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 514 அல்லது 21.5% வீழ்ச்சியடைந்துள்ளது என்று இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில், 894 பேர் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேறினர் அல்லது அவர்கள் சொந்த நாட்டிற்கு அல்லது மூன்றாவது நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

அதே காலகட்டத்தில் மற்றொரு டப்ளின் பிரகடன ஒப்பந்த நாட்டை 636 பேரை பொறுப்பேற்குமாறு சுவிஸ் கோரிய அதேவேளை, 174 பேர் குறித்த நாட்டிற்கு மாற்றப்பட்டனர்.

மற்ற டப்ளின் நாடுகளால் 415 நபர்களை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு சுவிஸ் கோரப்பட்டதுடன், 99 பேர் சுவிட்சர்லாந்திற்கு மாற்றப்பட்டனர் என்றும், இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter