OOSAI RADIO

Post

Share this post

தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம்!

கௌரவமான மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்ற யோசனையை தாம் முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.

நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்பு செய்கின்றனர், எவரும் இத்தனை வயது வரைதான் வேலை செய்யவேண்டும் என்ற ஒரு விடயம் உள்ளது.

ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும். தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter