OOSAI RADIO

Post

Share this post

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் இதுவா?

தென்னிந்தியாவின் முன்னனி நடிகரான விஜய்யின் 69 திரைப்படத்தைத் பிரபலமான இயக்குநர் எச். வினோத் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீண்டும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ள குறித்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளியில் இதுவே விஜயின் இறுதித் திரைப்படம் என்பதைப் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கமைய குறித்த காணொளி காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

மேலும், தளபதி 69 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter