OOSAI RADIO

Post

Share this post

Video Game ஆல் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணத்தில் கேம் விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயது மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து சற்றுமுன் உயிர்மாய்த்துள்ளான்.

அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான்.

அவனது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அளவெட்டி அருணோதயாவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment

Type and hit enter