OOSAI RADIO

Post

Share this post

கொலஸ்ட்ரால் அளவு குறைய வேண்டுமா?

ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் கொண்ட உணவானது உங்களின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், இதய நோய் அபாயங்களைக் குறைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை, வெந்தயம் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறி ஜூஸ்களை தினமும் காலையில் குடித்து வந்தால், உங்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை ஆபத்தான சுகாதார நிலையை ஏற்படுத்தலாம்.

தக்காளி ஜூஸ்

தினமும் காலையில் ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸ் குடிப்பது நீரேற்றமாக இருக்கும். தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளன. தக்காளியில் உள்ள லைகோபீன்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே காலையில் தக்காளி சாறு குடிப்பது நல்லது.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீஸ், பொட்டாசியம், அயன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் அதன் ஊட்டச்சத்து பண்புகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. கேரட்டில் நார்ச்சத்து, வைட்டமின் கே1, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். கேரட் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என்று எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கீரை ஜூஸ்

நார்ச்சத்து நிறைந்த கீரை ஜூஸ்-ஐ உணவில் சேர்த்துக் கொள்வதும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். கீரையில் நேச்சுரல் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், இரத்த நாளங்களை விரிவுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கீரையில் நார்ச்சத்து, அயன், வைட்டமின் ஏ, ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்களும் கீரையில் அதிகம் உள்ளது.

வெந்தய ஜூஸ்

நார்ச்சத்து நிறைந்த வெந்தயச் ஜூஸ்-ஐ தினமும் காலையில் குடிப்பதும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். வெந்தயத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

பாகற்காய் ஜூஸ்

காலை உணவில் ருசியான ஜூஸ்களை தேடுபவர்களுக்கு இது ஒரு பிரபலமான தேர்வாக இல்லாவிட்டாலும், அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் பாகற்காயின் பங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆய்வுகளின்படி கசப்பான பாகற்காய் ஜூஸ் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பாகற்காய் ஜூஸில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் , வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை கொண்டுள்ளது.

Leave a comment

Type and hit enter