தேர்தல் தினங்களில் இடம்பெறும் ரயில் சேவைகள்! - oosai.lk

OOSAI RADIO

Post

Share this post

தேர்தல் தினங்களில் இடம்பெறும் ரயில் சேவைகள்!

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அன்று (21) தொடருந்து நேர அட்டவணை வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள், 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும், குறுகிய தூர தொடருந்துகளில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter