OOSAI RADIO

Post

Share this post

நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு!

வாக்காளர் மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார அலுவலகங்களும் ​நேற்று (20) நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றப்பட வேண்டும் என, தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பேசிய அவர், தொகுதி மட்டத்தில் தற்போது இயங்கிவரும் அனைத்து தேர்தல் பிரசார அலுவலகங்களையும் இன்று நள்ளிரவு முதல் அகற்றுவது அத்தியாவசியமானதென குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வரை, மாவட்டத்திற்கு ஒரு பிரதான அலுவலகத்தையும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்குச் சாவடியுடன் தொடர்புடைய ஒரு அலுவலகத்தையும் பராமரிக்க அனுமதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று நள்ளிரவு முதல், ஒரு தேர்தல் பிரிவு அல்லது மாவட்டத்திற்கு ஒரு அலுவலகமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த அலுவலகங்கள் அகற்றப்படாவிட்டால், அவற்றை அகற்ற, பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு வேட்பாளரின் இல்லத்தை அலுவலகமாகப் பராமரிக்கலாம் என்றும், வாக்குச் சாவடியிலிருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்பு அல்லது அலுவலகம் அமைந்திருந்தால், செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிக்கும் முன், அனைத்து பிரசாரப் பொருட்களையும் அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Type and hit enter