OOSAI RADIO

Post

Share this post

மருத்துவ உலகில் இடம்பெற்ற இன்ப அதிர்ச்சி!

சீன நாட்டில் லீ என்ற பெண் 2 குழந்தைகளை பெற்றெடுத்தது உலகளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

குறித்த பெண்ணுக்கு உலகத்திலயே அரிய வகையான மருத்துவ நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு யூட்ரஸ் டைடெல்ஃபிஸ் என்ற பாதிப்பு உள்ளது.

இந்த பாதிப்பு உலகிலேயே வெறும் 0.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு இரு கருப்பை இயற்கையாகவே இருக்கும். இதனால் லீ என்ற பெண்ணுக்கு இரு கருப்பையில் ஒரே சமயம் கருவுற்று, அவற்றில் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஒரு கருப்பையில் ஆண் குழந்தையும் {3.3 கிலோ} மற்றொரு கருப்பையில் பெண் குழந்தையும் {2.4 கிலோ} எடையில் மிக ஆராக்கியமாக பிறந்துள்ளது.

இதுகுறித்து வைத்தியர் கூறும்போது,

“இந்த நிகழ்வு ஒருவருக்கு தான் நடக்கும். அதுவும் இயற்கை முறையில் கருத்தரித்த பெண் இரண்டு கருப்பையில் கர்ப்பம் ஆவது மிகவும் அரிது,” என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு சீனா மட்டுமின்றி சர்வதேச மருத்துவ உலகில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Type and hit enter