இன்று ஆரம்பமாகுத பிக்பாஸ் 8 தமிழ்! (தமிழ்)
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் செய்தி ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
விஜய் சேதுபதி இந்த சீசனில் தொகுப்பாளராக வரப்போகிறார் என்றதும் அவருடைய ஆளுமை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்பதற்காகவே பலர் காத்திருக்கிறார்கள்.
நாளை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது ஒரு வாரத்திற்கு முன்பே, வீடு குறித்த ப்ரோமோ வெளியாகி விடும்.
இந்த வீட்டில் என்னவெல்லாம் வசதிகள் இருக்கிறது அல்லது இந்த முறையை ஏதேனும் புதிய மாற்றம் இருக்கிறதா? என்பது அந்த ப்ரோமோக்களில் தெரிந்துவிடும். ஆனால் இந்த முறை விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அவருக்கு மக்கள் அட்வைஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் தான் ஒரு ப்ரோமோவில் இருந்தது.ஆனால் வீடு பற்றிய விஷயங்கள் ரகசியமாகவே இருந்தது.
ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீடு புது முறையில் வடிவமைக்கப்படும். இந்த முறை என்ன கெட்டபில் வடிவமைக்கப்பட போகிறது என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அதை ரகசியமாக வைத்திருந்த டீம் இன்றுதான் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டை காட்டி இருக்கின்றனர்.
அதில் விஜய் சேதுபதி மயிலின் தோகை போன்று அமைந்திருக்கும் வாசல் வழியாக வீட்டிற்குள் வருகிறார். வீட்டிற்குள் வந்ததும் பிக் பாஸின் புது வீடும் ரெடி, புது ஆளுங்களும் ரெடி. புதுசா நானும் ரெடி. வீடு அழகா இருக்கு ஆனால் நிகழ்ச்சி இன்னைக்கு இல்ல நாளைக்கு என்று அந்த ப்ரோமோவில் சொல்லி இருக்கிறார். வீட்டின் கார்டன் பகுதி இன்று முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற ஹேஸ் டேக்குடன் இந்த முறை நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த ப்ரோமோவில் சில போட்டியாளர்களுடைய டான்ஸ் காட்சிகளும் இருக்கிறது. ஆனால் முகத்தை சரியாக தெரியாதபடியே வைத்திருக்கின்றனர்.
யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியலில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்களன் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும். https://www.youtube.com/embed/5D1JWlmlAdM?si=EglwlO1eKrQA_niS

விஜய் டிவியில் நாளை அக்டோபர் 06ஆம் திகதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸில் இந்த சீசன் வீட்டை விஜய் சேதுபதி சுற்றி காட்டி இருக்கிறார்.