OOSAI RADIO

Post

Share this post

பாடசாலைகளில் மதிய உணவு பற்றிய புதிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு எந்த வகையிலும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பகல் உணவு வழங்குவதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று (08) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு இந்த மதிய உணவுக்கான கொடுப்பனவுகள் தாமதமாகி உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பகல் உணவு வழங்கும் நடவடிக்கை உரிய முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் நிதி பற்றாக்குறை காணப்பட்ட இடங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter