தாயின் கால்வலிக்கு மகன் கொடுத்த மருந்து!
தாய்க்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு மகன் செய்த காரியம் இணையத்தில் காணொளியாக வெளியாகியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் சமீப காலங்களாக பல சம்பவங்களில் காணொளிகள் நொடிக்கு நொடி வெளியாகிவிடுகின்றது. சில நபர்களுக்கு தனது திறமையை வெளிக்காட்டும் நடைமேடையாகவும் இருக்கின்றது.
ஒருசிலரின் செயல்கள் காண்பவர்களை நெகிழ வைக்கவும் செய்கின்றது. இங்கும் அப்படியொரு நெகிழ்ச்சியான காட்சியை தான் நாம் காணப்போகின்றோம்.
இளைஞர் ஒருவரின் பைக் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் நின்று விடுகின்றது. இத்தருணத்தில் தனது தாயும் உடன் இருக்கின்றார்.
பெட்ரோல் இல்லாமல் வண்டியை மட்டும் தள்ளிச் செல்வதே மிகவும் சவாலான காரியமாக இருக்கும். ஆனால் குறித்த இளைஞர் தனது தாய்க்கும் கால் வலிக்கக்கூடாது என்பதற்காக அவரையும் பைக் பின்னால் வைத்துக் கொண்டு தள்ளிச் செல்கின்றார்.
குறித்த காட்சியில் இளைஞரின் சட்டை முழுவதும் வியர்வையால் நனைந்து இருப்பதையும் நாம் காணமுடிகின்றது. உலகத்தில் தாய் மட்டும் பிள்ளைகள் மீது பாசம் வைப்பதில்லை. பிள்ளைகளும் பெற்றோர்களின் மீது பாசமாக இருப்பது இக்காட்சி மூலம் வைரலாகி வருகின்றது.