OOSAI RADIO

Post

Share this post

மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை!

WhatsApp போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

dir.ccid@police.gov.lk ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இணைப்புகளைத் திறக்கவோ அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP/ PIN), குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a comment

Type and hit enter