மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்கள்!
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் அண்மையில் வெளியான தகவல்கள் முற்றிலும் பிழையானவை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்களை 6 முதல் 11 வீதம் வரையில் குறைப்பது தொடர்பில் முன்வைத்த யோசனையை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், காலாண்டு பகுதிகளுக்கான செலவுகள் மற்றும் வருமானங்கள் உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை முன்வைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் திருத்தம் குறித்த யோசனையை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.