OOSAI RADIO

Post

Share this post

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணைய முகவரிகளை பயன்படுத்தி சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் Free Giveaway என கூறி வரும் செய்திகள் அழுத்துவதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்திப் பரிமாற்றம் அதிகரித்துள்ளமை தொடர்பில் தமது சங்கத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே மத்யூ குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலி செய்திகள் மூலம், சைபர் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் ஒரு நபரின் முக்கியமான தனிப்பட்ட தரவை பெற முடியும். ஒரு நபரின் சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான போலியான செய்திகளை கிளிக் செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment

Type and hit enter