வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம்!
மனக்கவலைகள் துன்பங்கள் உங்களிடம் இருந்து இந்த வருடத்துடன் விலகி கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒன்று உங்களுக்கு நடக்கலாம்.
அது ராஜ அதிர்ஷ்டம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் ராஜ அதிர்ஷ்டம் வரப்போகும் இந்த ராசிக்காரர்கள் ராஜ அதிர்ஷ்டத்தைத் தக்க வைக்கவும் அவற்றை எவ்வாறு சிறந்தமுறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இங்குப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரருக்கு இந்த வாரம் உங்களின் நிதிநிலையில் மேம்பாடு காணலாம். மகிழ்ச்சி உங்கள் முகத்தில் பிரகாசமாக ஜொலிக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகம் வெளிப்படுத்துவீர்கள். படிப்பு சம்பந்தமான அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். ஆனால் மேஷ ராசிக்காரர் துணையிடம் விட்டுக் கொடுத்துச் சென்றால் உங்களுக்கு நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் அனைவருக்கும் உங்கள் சிறப்பான செயல்களில் உங்கள் மனம் குளிரும்படி அதிர்ஷ்டம் வந்தடையப்போகிறது. அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் அல்லது நடக்கலாம். அதுபோன்று ரிஷபம் ராசிக்காரர் தங்கள் திறமையைத் தீவிரமாகக் காட்டி வருபவராக இந்த வருடம் செயல்பட்டிருக்கலாம் அதற்கான வெகுமதி உங்களுக்கு இந்த வருடம் முடிவதற்குள் கிடக்கும்.
மிதுனம்
இந்த மிதுன ராசிக்காரர்கள் ஏற்கனவே சிறிது மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்களின் மன அழுத்தம் தணிந்து வாழ்வில் இன்பம் காணலாம். ஆனால் பல சவால்கள் உங்கள் முன் வந்தாலும் தைரியமாக நின்று சமாளிக்கும் ஆற்றல் உங்களிடம் அதிகரிக்கும். மிதுன காரர்கள் யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சிறப்பான வருடமாக இந்த வருடம் முடிவதற்குள் உங்களிடம் வந்துசேரும். கடகம் புதியவர்களைச் சந்திக்க நேரிடும். அவர்கள் மூலமாக ஏதேனும் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கலாம். கடக ராசிக்காரரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆனால் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படலாம். அதனைப் பொறுமையுடன் கையாண்டால் எந்தவித பிரச்சனை ஏற்பட்டாலும் தடுத்துவிடலாம். கடகத்தின் கடின உழைப்புக்கு அதிக பாராட்டுகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் மீது மதிப்பு மற்றும் மரியாதை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர் தான் எதிர்பார்க்காத நற்செய்தி உங்களிடம் வந்தடையும். உடல் ஆரோக்கியத்தின் மீது சிறிது கவனம் தேவை. வேலையில் உங்களின் அதிகாரம் ஓங்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டும் நேரம் இது. சிம்மம் ராசிக்காரர் குடும்பத்துடன் மனம் திறந்து பேசினால் கவலை நீங்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரராக இருப்பவர்களுக்கு பலகருத்து வேறுபாடுகள் நேரிடலாம். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தைக் கவனமுடன் கையாள வேண்டும். துலாம் ராசிகளுக்கு நிதி ஆதாரங்கள் அதிகரிக்க வாய்ப்பு பலமடங்கு உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர் காதல் வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுவார்கள். இந்த மகர ராசிக்காரரின் காதல் உணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் புது வழிகாட்டுதல்கள் மூலம் ஒளிமயமான எதிர்காலமாக மாறலாம்.