OOSAI RADIO

Post

Share this post

தலையெழுத்தை மாற்றப்போகும் தங்க சுரங்கம்!

ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை முன்பு இங்கு 27 டன் அளவுக்குத் தங்கத் தாது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அதை விட 50% அதிக தங்கம் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தங்கம் என்பது பூமியின் பல பகுதிகளில் தாதுக்களாக்கப் புதைந்து இருக்கும். அதன்படி ஈரான் நாட்டிலும் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. அதுதான் சர்ஷூரான் (Zarshouran). கடந்த பல ஆண்டுகளாகவே இங்கிருந்து தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தங்கத் தாது முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸர்ஷூரான் சுரங்கத்தில் இருந்து அதிகளவில் தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக சர்ஷூரான் சுரங்க நிறுவனத்தின் செயல் தலைவர் முகமது பர்வின் கூறுகையில்,

முன்பு இந்த பகுதியில் 27 மில்லியன் மெட்ரிக் டன் தங்கத் தாது இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய ஆய்வில் 4.3 கோடி மெட்ரிக் டன்கள் வரை தங்க தாது இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கக் கூடிய தங்க வளங்களும் 116 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. சுரங்கத்தின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது என்றார்.

இந்த தங்கச் சுரங்கம் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் தங்கத் தாது இருப்பது உறுதியாகியுள்து.

நிலையில், இதனால் இந்த பிராந்தியத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.ஈரானில் அமைந்துள்ள இந்த சர்ஷூரான் சுரங்கம் தான் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள மிகப் பெரிய தங்கச் சுரங்கமாகும்.

அ ங்கே ஈரான் அரசுக்குச் சொந்தமான ஈரானிய சுரங்க தொழில்கள் மேம்பாடு மற்றும் சீரமைப்பு அமைப்பு (IMIDRO) ஆப்ரேட் செய்து வருகிறது. ஈரான் நாட்டில் இங்கிருந்து தான் அதிகளவில் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாதம் சுமார் 100 கிலோவுக்கு மேல், ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமாகத் தங்கம் இங்கிருந்து மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது.

அதேவேளை மேற்குலக நாடுகள் ஈரான் நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஈரான் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.

அதைச் சமாளிக்க ஈரான் தனது சுரங்க மற்றும் உலோகத் துறையை விரிவுபடுத்தவும் அதிகளவில் அவற்றை வெட்டி எடுக்கவும் திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டபடி இங்கிருந்து அதிகளவில் தங்கத்தை வெட்டி எடுக்க முயன்றால் அது ஈரான் பொருளாதாரத்திற்கு மிக பெரியளவில் உதவும் எனவும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment

Type and hit enter