ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய (4) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(5) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 69 சதம்.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 92 சதம் விற்பனை பெறுமதி 375 ரூபாய் 95 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 14 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 74 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 68 சதம் விற்பனை பெறுமதி 336 ரூபாய் 30 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 91 சதம், விற்பனை பெறுமதி 210 ரூபாய் 77 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபாய் 13 சதம், விற்பனை பெறுமதி 191 ரூபாய் 59 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 32 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபாய் 20 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 97 சதம்.