சிக்கல்களை அனுபவிக்கப்போகும் ராசிகள்!
நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி, நீதி கடவுள் என அழைக்கப்படும் சனி தேவன் கும்ப ராசியை விட்டு வெளியேறி மீன ராசியில் நுழைகிறார். சனி தேவன் மீன ராசியில் நுழைந்தவுடன், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்.
இந்த ஏழரை சனி பெயர்ச்சியால் வாழ்க்கையில் சிக்கல்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யாரென நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
சனி பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. உடல் ஆரோக்க்கியம் பாதிக்கும். பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஆனால், எதிர்கால பிரச்னைகளுக்கு இந்த காலகட்டத்திலேயே தயாராகிக் கொள்ள வேண்டும். இதனால் வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம். குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
கும்ப ராசி
மீன ராசியில் சனி சஞ்சரிக்கும் கால கட்டத்தில், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனியாக அமையும். பாத சனியால் கும்ப ராசியினருக்கு பணப்பிரச்னை, அதனால் ஏற்படும் மன்க் கஷ்டம் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வேலையில் கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன்கள், உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இணக்கம் இருக்காது. கருத்து வேறுபாடு தான் இருக்கும்
மீன ராசி
2025 சனி பெயர்ச்சியினால் மீன ராசியினருக்கு 2028ம் வருடம் வரை ஏழரை சனி நீடிக்கும். தற்போது கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஏழரை சனி தொடங்கியுள்ள நிலையில், விரய சனி காலம் நடக்கிறது. 2025ம் ஆண்டு மீனத்திற்கு வரும் போது, அதிக கஷ்டத்தை தரக்கூடிய ஜென்ம சனி ஏற்பட உள்ளது. இந்த காலத்தில் உடல் நலன் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மனதில் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும். பொருளாதார நிலை பாதிக்கப்படும், பண இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.