மதுபான அனுமதிப் பத்திரம் – இடைக்காலத் தடை
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி மதுபானசாலை உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனு நீதியரசர்களான ஏ.எச்.எம்.டீ.நவாஸ், குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.