OOSAI RADIO

Post

Share this post

புதன் பெயர்ச்சி – பண மழைக்கான ராசிகள்!

நவகிரகங்கள் அனைத்திற்கும் இளவரச ராஜ புதன் பகவான், இவர் சிம்மத்திற்கு குடிபெயரப்போவதால் 3 ராசிக்காரர்கள் பண மழையில் நனையபோகிறார்கள்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 4 திகதி மதியம் 12:11 மணி அளவில் புதன் பகவான் தனுஷ் ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த இடம்பெயர்தல் குறிப்பிட்ட இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகத்தை அள்ளித்தரப்போகின்றார். அவ்வாறு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ராசிச்சார்ரகள் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

மிதுன ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நல்ல செல்வச் செழிப்புடன் சுகமாக வாழ்வார்கள். புதிய ஆண்டில் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கி இன்பம் பெருகப் புதன் பகவான் உங்களுக்கு அருள்புரிகிறார்.

மிதுன ராசிக்காரர்களாக இருப்பவர்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சிறிது கோபம் தணிக்க வேண்டும். கோபத்தைத் தணித்தால் உறவு வலுப்பெறும். பணிகளில் ஏதேனும் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து மன அமைதிக் காண்பீர்கள்.

மிதுன ராசிக்காரரின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறப்போகிறது. குறிப்பாகக் கடை வியாபாரிகள் ஏதேனும் கடை திறப்பு செய்ய முயன்றால் அதில் நல்ல வரவு கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் வருமானத்தில் உயர்வு காண்பீர்கள், துலாம் ராசிக்காரர்கள் ஏழ்மையிலிருந்து விரைவில் நல்ல சுகம் காண்பீர்கள், சமூகத்தில் உங்கள் மீது மிகுந்த மரியாதை கூடும். இந்த ராசிக்காரர்கள் ஏதேனும் நீதிமன்ற நிலுவையில் மனக்கசப்பிலிருந்தால் அதில் நல்ல தீர்வு கிடைக்கும்.

உடலில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குறிப்பாகச் சளி, மூட்டுவலி தொடர்பான பிரச்சனையிலிருந்து குணமடைவார்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது. நண்பர்களுடன் அதிக நெருக்கத்தில் இருப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.

இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அதிகம் கவனத்தில் இருப்பார்கள். பணி மீது மிகுந்த ஆர்வம் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்கள் திருமண உறவிலிருந்து மனக்கசப்புகள் நீங்கி இன்பம் காணும் நல்ல நேரம் உங்களை தேடி வரபோகிறது.

மகர ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட வேண்டிய நேரம் இது, எனவே மாணவர்கள் உங்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் புத்தாண்டில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

Leave a comment

Type and hit enter