அதிகரித்த மரக்கறி, பழங்கள் விலை!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி வகைகள், பழங்கள் கணிசமான அளவில் விலை உயர்ந்த நிலையில் உள்ளது.
ஹட்டன் பகுதியில் உள்ள அனைத்து நகரங்களிலும் இன்றைய தின (08) மரக்கறி விலைகள்,
போஞ் 800 ரூபா, கறி மிளகாய் 900 ரூபா, லீக்ஸ் 400 ரூபா, பீட் 380 ரூபா, கட் பீட் 340 ரூபா, கெரட் 380 ரூபா, கத்தரிக்காய் 480 ரூபா, தக்காளி 400 ரூபா, பயித்தங்காய் 480 ரூபா , மரவள்ளி கிழங்கு 150 ரூபா, புடலங்காய் 300 ரூபா, வட்டக் காய் 200 ரூபா, நூக்கல் 260 ரூபா, பச்சை மிளகாய் 1200 ரூபா, மூட்டை கொச்சி காய் 1800 ரூபாயாகவும், தேங்காய் 180 ரூபா முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து பொருட்களும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும், பண்டிகை புத்தாண்டு காலத்தில் விலை உயர்வால் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.