OOSAI RADIO

Post

Share this post

சிறுவனின் உள்ளாடையை கழற்றியவர்களுக்கு நேர்ந்த கதி!

11 வயது சிறுவனின் உள்ளாடையை கழற்றி, சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ், 16 மற்றும் 18 வயதான இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், வெல்லவாய அம்பகமுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் வெல்லவாய நீதவான் முன்னிலையில் நேற்று (08) ஆஜர்படுத்தப்பட்ட போது, இருவரையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

11 வயதான அந்த சிறுவன், விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, 16 மற்றும் 18 வயதுகளையுடைய இருவர், அந்த சிறுவனின் உள்ளாடையை கழற்றி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளனர்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்ததை சிறுவன், தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பட்டை அடுத்து சந்தேகநபர்களை கைது செய்த அம்பகமுவ பொலிஸார், நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter