OOSAI RADIO

Post

Share this post

எச்சரிக்கை – 5 நாட்களுக்கு பனிப்புயல்!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்னர் தொடர்ந்து 5 நாட்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கு முன்பாக, டிசம்பர் 20ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக 114 மணிநேரங்களிற்கு குளிர்கால புயல் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஸ்கொட்லாந்து மற்றும் வடஇங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கும் என வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிழக்கு நோக்கி நியூகெஸ்டல் நகரத்தை மையமாகக் கொண்டு பனிப் புயல் கிறிஸ்துமஸ் வாரம் முழுவதும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் ப்லைமௌத் போன்ற தெற்குப் பகுதிகளில், மணிக்கு 3 மில்லிமீற்றர் வரை கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, டிசம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை மதியத்திற்கு முன், ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில், குறிப்பாக நோர்தன் ஹைலேன்ட்ஸ் மற்றும் போர்ட் வில்லியமில், பனியின் ஆழம் 20 சென்றிமீற்றர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Midlands and around Bradford, Leeds மற்றும் York போன்ற இடங்களில் லேசான பனிப் பொழிவு தொடரும் அத்துடன் டிசம்பர் 24ஆம் திகதி, வடக்கு – கிழக்கு கடற்கரைப் பகுதிகள், குறிப்பாக Newcastle, Durham மற்றும் Middlesbrough ஆகிய இடங்களில் 1.5 சென்றிமீற்றர் வரை பனி படியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கால நிலையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter